உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா துகள்களைத் தடுத்து அங்கேயே நிறுத்திவிடுகின்றன. மூக்கின் அடிப் பாகத் தில் திரவம் போன்ற அமைப் புள்ள பகுதி ஒன்று இருக்கிறது. அங்கே, முன்னே உள்ள மயிர்த் தொகுதிகளை மீறி நுழைந்த புழுதித்துகள்கள் திரவத்தில் சிக்கிக் கொள்கின்றன. மீறி நுழையும் புழுதித் தூள்களை மூக்கிலே உள்ள நெருக்கமாக நின்று நீட்டிக் கொண்டிருக்கும் (Cilia) சிலியா என்ற மயிர்க்கூட்டம், விசிறி போல இருந்து கொண்டு விரட்டி அடித்து விடுகின்றன. இவ்வாறு வடிகட்டும் அமைப்பு போல, வழி நெடுகிலும் காத் திருக்கும் மூக்கின் அமைப் பில், அருகிலே அமைந்திருக்கும் இரத்தக் குழாய்கள், அங்கேயே இருந்து, வருகின்ற காற்றை இதமாகவும் பதமாகவும் சூடாக மாற்றி உள்ளே அனுப்புகின்றன. நுரையீரலைக் காக்கவும், நல்ல தூய காற்றுக் கிடைக்கவும் மூக்கு காரியம் செய்வதால் தான், மூக்கின் வழியாகவே சுவாசிக்க வேண்டும் என்கிறோம். வாய் வழியே சுவாசித்தால், பல துன்பங்கள் ஏற்படும். ஆனால், ஒட்டப் பந்தயம் போன்றவற்றில் ஈடுபட்டு, அதிகக் காற்று உடலுக்குத் தேவைப்பட்டால், சுற்றுப்புற சூழ்நிலை தூய்மையாகவும் இருந்தால், வாய் வழியாக சிறிது நேரம் சுவாசிக்கலாம். மற்ற நேரம் எல்லாம் மூக்கினால் தான் சுவாசிக்க வேண்டும். மூக்கு வழியாக சுவாசித்த பிறகு, மூக்கு வழியாகத் தான் மூச்சை விடவேண்டுமா என்றால் பயிற்சி செய்யும் பொழுது தேவையில்லை. காரணம் என்னவென்றால், நமது தேவைக்கு ஏற்ப, அதிகமாகவே