பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 23 மனிதர்கள் வாழ்க்கையை ஐந்து வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். 1. மாக்கள் 2. மக்கள் 3.அறிவாளி 4. அமரர் 5. தேவர் என்பதே அந்த ஐந்து வகைகள். ஒரு மனிதரின் வாழ்க்கை இப்படித்தான் தொடங்கி, இந்த நிலையில் தான் முடிவுபெற வேண்டும் என்ற சூட்சமத்தின் சூத்திரமாக, சுலோகமாக, வேதவசன மாகவே இந்த ஐந்து நிலைகளுக்கும் இருக்கின்றன. அறிவில்லாத, அறிவுத் தெளிவடையாத நிலையில் உள்ளதைத் தான் மாக்கள் என்கிறோம். இந்த ஜீவராசிகளை அஃறிணை என்றும் அழைக்கிறோம். ஐந்தறிவிலிருந்து மாறி, ஆறறிவு பெற்ற ஜீவிகளாக இருக்கும் மனிதர்களை மாக்கள் என்கிறோம். உயர்திணை என்றும் உயர்வாக அழைக்கிறோம். மக்கள் எல்லோருமே மதிப்பிற்குரியவர்களாக இருப்பதில்லையே. உண்டு, உறங்கி, நாட்களைக் கடத்தி, முதிர்ந்து, உதிர்ந்துபோகும் உடல்களாக பலர் இருக்கின்றார்களே! தமக்குரிய ஆறாவது அறிவைப் பயன்படுத்தி, பக்குவப்படுத்தி, பெருமையுற வளர்த்து, பேணிக்காத்து, பண்படுத்திக் கொண்டிருக்கும் பண்பாளர்களையே நாம் அறிவாளிகள் என்கிறோம். ஆமாம், அறிவாளிகள் மனித குலத்தின் மேல் தட்டில் வாழ்கிற, மக்கள் மதிக்கிற மாண்புமிகுநிலையில் வாழ்வு நடத்துகிற பெருமைக்குரியவர்கள். ---