பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


யின் நோக்கம் ஒவ்வொருவருக்கும் அவனுக்குரிய வாய்ப் பைக்கொடு” என்பதே மூல வாக்காகும். வயது, பால், இனம். சாதி, மதம், தேசம், பொருள் இவைகளுக்கு அப்பாற்பட்ட நிலயிலே வேற்றுமை பாராட்டாது, திறமை மிகுந்தவர்க்கே முதலிடம் அளித்து, அவர்களைப் பின்பற்றி மற்றவர்கள் பழகிப் பங்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றது. ஏழை என்பதாலோ தாழ்ந்தவன் என்பதாலோ, எவரும் விளையாட்டில் பங்கு பெற மறுக்கப் படுவதுமில்லை. வெறுக்கப் படுவதுமில்லை. 'ஒற்றுமைக் களமாக, உயர்ந்த எண் ணங்களை விளைவிக் கும் நிலமாக பயன்படுவது ஆடுகளமாகும்." ஒவ்வொருவரும் தன் திறமையைக் காட்டச்சிறந்த வாய்ப்பையும் அளிக்கிறது இக்கல்வி. வாழு, வாழ விடு என்பதன் அடிப்படையே குடியரசு ஆகும். தானும் வாழவேண்டும் பிறரும் வாழ உதவவேண்டும். தான் பெற்ற இன்பம் பிறரும் தூய்க்கவேண்டும் என்ற பெரும் நோக்கங்கள் நடைமுறையிலே உலவுகிறது, ஆடுகளத்திலே இந்நிலை பெறப் பரந்த உள் ளமும் விரிந்த நோக்கமும் தேவை. அப்பண்பாட்டை வளர்க்கிறது உடற் கல்வி. விதிகளுக்குக் கட்டுப்பட்டு விளையாடவேண்டிய கட்டாய நிலை, விதியோடு விளையாடி னால் தான் வெற்றியம் பெருமை யும் கிட்டும் என்பதால், ஒரு கட்டுக்குள் அடங்கி நடக்கும் தன்னடக்கம். பலர் சேர்ந்து ஒரு குழுவாகி எ திர்க்குழுவோடு ஆடும் பொழுது, தன் குழுவிலே தனக்கு எதிரி ஒருவன் இருந்தாலும் அவனோடு ஒத்துழைத்து ஆடினால்தான் தன் குழு வெற்றிபெறும் என்ற நிலை வரும்போது உள் வேற்று மையை மறந்து பொதுநலத்திற்காக ஒன்றுசேரும் தன்மை, குழுத் தலைவனுக்கு அடங்கி நடத்தல்; தன் கீழ் பலர் அடங்கப்