பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 பணியாற்றும் தலைமைத் தலைவன் வழி நடத்துல்; வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்று எண்ணித் தோற்ற பின் சிரிப்பதும்; வெற்றி பெற்ற பின் தற்பெருமைக் கொள்ளாத தகைமையும் விதிகளுக்கு அடங்கி நடுவர்களுக்குக் கட்டுப்பட்டு நல்ல பல செயல்களை ஆற்றும் பேராண்மை, முதலிய பண்புகளே இடைவிடாது ஊட்டிவளர்த்து ஒவ்வொருவருக்கும் தனி நிலப் பண்பாட்டை விளக்கிப் பெருக்கி சிறந்த மகளுக ஆக்குகிறது உடலியற் கல்வி. களிப்பு மனித வாழ்க்கையின் இலட்சியமாகும். ஒரு சமூகத்தின் வளர்ச்சியை மதிப்பிடக் களிப்புதான் அளவு: கோலாகப் பயன்படுகிறது. நிறைந்த செயல்களிலும் நிம்மதியான வாழ்க்கையிலும்தான் களிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு களிப்பு மிகுந்த வாழ்க்கையில் வெற்றியும் தோல்வி யும் பொலிவும் நலிவும், ஒளியும் இருளும், ஒப்பாரியும் தாலாட்டும் டீசறி மாறி எழுத்தாலும், இதுதான் வாழ்வின் உண்மை எனத் தெளிந்து கலங்காது வாழ்கின்ற மனத் திண்மையை அளிக்கிறது உடற்கல்வி. “எது தேர்ந்தாலும் ஏற்றுக்கொள்ளும் நெஞ்சம் இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும் கண்டு இளநகை புரியும் வலிமை, தன் திறத்தில் நம்பிக்கையும் சூழ்நிலைகளின் தன்மை யையும் புரிந்துகொண்டு மகிழ்வால், கேளிக்கைகளால் இன்பத்தால், கோபத்தைச் சோகத்தைத் தகர்த்தெறியும் சக்தியை உடற் கல்வி உடலுக்கும் உள்ளத்திற்கும் அளிக்கிறது. தனி மனிதன் தன்னுடைய உரிமையையும் பிறரது உரிமைகளின் நிலையைப் புரிந்துகொண்டு தன் நலம் நீக்கிப் பொதுநலப் பணியோடு வாழ்ந்து களிப்படைவது தான் குடியரசின் நோக்கம். இத்தகைய அரும் பணியை உடற் கல்வி ஆடுகளத்தினுள் செய்து கொண்டுதான் வருகிறது.