பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



natural language

304

.navy,mill


|

வடிவமைப்புக்கு மாற்றிய பின்னரே அவற்றைத் திரையில் காட்டும்.

natural language :இயற்கை மொழி: மனிதர்கள் பேசுகின்ற அல்லது எழுதுகின்ற மொழி. கணினி நிரலாக்க மொழி மற்றும் எந்திர மொழியிலிருந்து மாறுபட்டது. கணினி அறிவியலில் செயற்கை நுண்ணறிவு என்ற பிரிவில், இயற்கை மொழிகளை கணினி புரிந்து கொள்வது, அதனைக் கணினிச் சூழலுக்கேற்ப பயன்படுத்துவது ஆகியவை பற்றிய ஆய்வுகள் அடங்கும்.

natural language processing : இயற்கை மொழியாய்வுச் செயலாக்கம் : கணினி அறிவியல் மற்றும் மொழியியல் ஆகியவற்றில் ஒரு ஆய்வுப் புலம். எழுதப்படும் அல்லது பேசப்படும் மனித மொழியை அறிந்துகொள்ளும் மனித மொழிக்கு மறுமொழியிறுக்கும் கணினி அமைப்புகள் பற்றி ஆராயப்படுகின்றன.

natural language query :இயற்கை மொழி வினவல் : ஒரு தரவுத் தள முறைமையில் தகவலைப் பெற இயற்கை மொழிகளின் (ஆங்கிலம், தமிழ் போன்ற) கட்டளைகள் மூலம் உருவாக்கப்பட்ட வினவல். (எ-டுஃ. எண்பதுக்குமேல் மதிப்பெண் பெற்றவர் எத்தனை பேர்? வினவல் கட்டளைத் தொடர்அமைப்பு குறிப்பிட்ட இலக்கண விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அப்போதுதான் கணினி அதைப் பகுத்து அறிந்து செயலாற்ற முடியும்.

natural language support :இயற்கை மொழி ஆதரவு : மனிதர்களின் குரலை அறிந்துகொள்ளும் கணினி. பயனாளர் குரல் கட்டளைகளை அவரின் சொந்த மொழியிலேயே தரலாம், கணினி அதற்கேற்ப செயலாற்றும்.

natural language system :இயற்கை மொழியாய்வு அமைப்புகள்: இயற்கை மொழியாய்வு முறைமை.

natural number: இயற்கை எண்:சுழி அல்லது அதைவிடக் கூடுதல் மதிப் புள்ள ஒரு முழு எண்.

navigation வழிநடத்தல்:வழி நடத்தல்; வழி செலுத்தல்; வழி கண்டறிதல்.

navigation bar :வழிநடத்து பட்டை: இணையத்தில் உலாவர அல்லது ஒரு குறிப்பிட்ட வலைத் தளத்தைச் சுற்றி வர மீத்தொடுப்புகளைத் தொகுத்து முகப்புப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டை.

navigation button :வழி செலுத்து பொத்தான்.

navigation keys :வழி நடத்து விசைகள் : திரையில் காட்டியின் (cursor) நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அல்லது வழிநடத்தும் விசைகள். விசைப்பலகையில் உள்ள நான்கு அம்புக்குறிகள், பின் இடவெளி (backspace),முடிவு (End),தொடக்கம் (Home), மேல்பக்கம் (Page Up), கீழ்ப் பக்கம் (Page Down) ஆகிய விசைகள் இவற்றில் அடங்கும்.

navigator : நேவிக்கேட்டர் : நெட்ஸ் கேப் நிறுவனம் உருவாக்கிய இணைய உலாவி மென்பொருள் (Browser),

navigator for e-mail :மின்னஞ்சல் வழிசெலுத்தி.

.navy.mil : நேவி.மில் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்கக் கப்பற் படையைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.