பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



National Information Infrastructure

303

native file format



சிகாகோ (அமெரிடெக் நிறுவனம்) (3) நியூயார்க் (ஸ்பிரின்ட் நிறுவனம்) (4) வாசிங்டன் டி.சி. (என் எஃப்எஸ் அமைப்பு).

National Information Infrastructure : தேசிய தகவல் உள்கட்டமைப்பு : வருங்கால உயர் அகல்கற்றை (Broad Band) விரிபரப்புப் பிணையம். அமெரிக்க அரசு முன்வைத்துள்ள திட்டம். அமெரிக்கா முழுவதும் உள்ள பயனாளர்களுக்கு தகவல், தொலைநகல், ஒளிக்காட்சி மற்றும் குரல் ஆகியவற்றை எடுத்துச் செல்லும். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே இப்பிணையத்தை நிறுவ உள்ளன. இணையத்தில் கேட்டவுடன் ஒளிக்காட்சி கிடைக் கக்கூடிய சேவையை பயனாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இத்தேவை தனியார் நிறுவனங்களை இத்திசை நோக்கித் தூண்டும் என அமெரிக்க அரசு கருதுகிறது. இதன்மூலம் கிடைக்கக்கூடிய சேவைகள் என முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சேவைகள் இணையத்திலேயே இப்போது கிடைக்கத் தொடங்கி விட்டன.

National Science Foundation:தேசிய அறிவியல் கழகம் : அமெரிக்க அரசின் முகமை. அறிவியல் ஆய்வுக்கென அமைக்கப்பட்டது. ஆய்வுத் திட்டப் பணிகளுக்கும் அறிவியல் தகவல் தொடர்புத் திட்டப்பணிகளுக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது. முன்னாளில் இணையத்தின் முதுகெலும்பாய் விளங்கிய என்எஸ் எஃப்நெட் இதன் படைப்பே.

native : உள்ளார்ந்த : தொடக்கத்தில் இருந்த வடிவில் நிலவக்கூடிய ஒன்றின் பண்புக் கூறு. (எ-டு) மென்பொருள் பயன்பாடுகள் பல்வேறு கோப்பு வடிவங்களைக் கையாளும் திறன் படைத்தவை. ஆனாலும் அவை உள்ளார்ந்த நிலையில் தன் சொந்த வடிவமைப்பையே பயன்படுத்திக் கொள்கின்றன. வேறு வடிவமைப்பில் உள்ள கோப்புகள் பயன்பாட்டு மென்பொருளின் உள்ளார்ந்தவடிவமைப்புக்கு மாற்றப்பட வேண்டும்.

native application :உள்ளார்ந்த பயன்பாடு : ஒரு குறிப்பிட்ட வகை நுண்செயலிக்காக உருவாக்கப்பட்ட நிரல். அந்த நுண்செயலியில் மட்டுமே செயல்படும். உள்ளார்ந்த பயன்பாடு அல்லாத பயன்பாடுகளைவிட அதிவேகமாகச் செயல்படும். அல்லாத பயன்பாடுகள் வேறொரு இடைநிலை நிரலின் உதவியுடன்தான் செயல்பட முடியும்.

native code : உள்ளார்ந்த குறிமுறை: ஒரு குறிப்பிட்ட கணினி அல்லது செயலிக்காக எழுதப்பட்ட கட்டளைத் தொகுதி.

native data base : உள்ளார்ந்த தரவுத்தளம்.

native file format: உள்ளார்ந்த கோப்புவடிவம் : ஒரு பயன்பாடு உள்ளார்ந்த நிலையில் தகவலை கையாளப் பயன்படுத்தும் கோப்பு வடிவம். பிற வடிவமைப்புகளில் உள்ள கோப்புகளை உள்ளார்ந்த அமைப்புக்கு மாற்றிய பின்னரே கையாள முடியும். (எ-டு) ஒரு சொல்செயலி மென் பொருள், ஆஸ்கி (ASCI) உரை வடிவில் உள்ள உரைக்கோப்புகளை அடையாளம் காணும். ஆனால் அவற்றை தனக்கேயுரிய சொந்த