பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





3. பூதமும் புதையலும்



விருந்து நடக்கும் இடத்தில், அல்லது சுற்றுலா பயணம் போகின்ற இடத்தில் இருக்கின்ற பொருள்கள் அனைத்தையும் இந்த ஆட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். பயணத்தில் பங்குகொண்ட அனைவரையும் இதில் கலந்து கொள்ளச் செய்யலாம்.

முதலில் என்னென்ன பொருள் இருக்கிறது என்றவாறு கணக்கிட்டு, அவற்றை சேர்த்தால் அது தான் புதையலாகும். உதாரணத்திற்கு பை, பேனா, குடை, செருப்பு, தட்டு, டம்ளர், கூடை, வளையம், ஊசி, முதலியவற்றை பயன்படுத்தலாம்.

இருப்பவங்களில் ஒருவரை பூதம் என்று தேர்ந்தெடுத்து, ஓரிடத்தில் அவரை மல்லாந்து படுக்கச் செய்ய வேண்டும். அவரைச் சுற்றி தலை, கால், உடல்பகுதிக்கு அருகாமையில் மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக வைக்க