உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44


மூலமாக, பந்து வீசப்பட்டிருக்கின்ற நிலையில் வேண்டுமானால், 'ஓட்டம்' எடுக்கலாம்.

72 இருமுறை ஆடுவதை ஏன் விதி தடை செய்கிறது?

முதல்முறை பந்தை ஆடிய உடனேயே, தடுத்தாடும் ஆட்டக்காரர்கள், பந்தைத் தடுத்து நிறுத்தவோ, பிடிக்கவோ போன்ற முயற்சியில் ஈடுபட்டு விடுகின்றார்கள்.

இவர் இரண்டாவது முறையாகத் தொடர்ந்து அடித்தாடும்போது, அருகில் இருக்கும் விக்கெட் காப்பாளர் அல்லது தடுத்தாடும் ஆட்டக்காரர்கள் பந்தைப் 'பிடித்துவிடும்' (Catch) முயற்சியைக் கெடுத்து, அவர் உரிமையைப் பறித்துவிடுகின்றதாக ஆகிவிடுகின்றது.

அதனால் அவர் ஆட்டமிழந்து விடுகிறார். அவரது குறிப்பேட்டில், 'இருமுறை பந்தாடியதால் ஆட்டமிழந்தார்' என்று குறிக்கப்படும். அவரது விக்கெட்டை வீழ்த்தினார் என்ற பெருமை, அந்தப் பந்தை எறிந்த பந்தெறியாளருக்குக் கிடைக்காது.

அத்துடன், நாம் இதையும் நன்றாக உணர்ந்து கொள்ளவேண்டும். ஒரு ஆட்டக்காரர், தான் பந்தை அடித்தாடிய பிறகு, எதிர்க்குழுவினர் எந்தவிதமான வேண்டுகோளும் விடுக்காத நேரத்தில், தனது பந்தாடும் மட்டையைக் கொண்டு, அந்தப் பந்தை அவர்கள் பக்கமாகத் தள்ளிவிடுகிறார் என்றால், அதுவும் விதியை மீறிய குற்றமாகிறது.

ஆகவே, முடிந்த வரை முதலில் தான் அடித்தாடிய பந்தைத் தடுத்து தொடர்ந்தாற் போல்