20
திற்குள் சென்றுவிட்டாரா என்பதைக் கண்காணிக்கவும், ஆட்டக்காரரை உடனடியாக அனுப்புகின்ற பொறுப்பும், குழுத்தலைவர்களைச் சார்ந்ததாகும்.
ஆட்டம் முடிவுற்ற பிறகு, குறிப்பேடுகளை நுண்ணிதின் ஆராய்ந்து, குறிக்கப்பட்டிருக்கும் ஓட்டங்களின் மொத்த எண்ணிக்கையை சரி பார்த்துத் தெரிந்து திருப்தியுறுதல், அவரது தலையாய கடமையாகும்.
23. ஒரு குழுவின் தலைவன், ஆடுவதற்குக் குறித்த நேரத்திற்குள் வராமல் இருக்கின்ற சூழ்நிலை அமைந்தால், என்ன செய்வது?
அவர் வராதபொழுது, குழுவின் துணைத் தலைவர் (Vice-Captain) மேலே குறித்திருக்கும் குறிப்புக்களையெல்லாம் விதிகளுக்கேற்ப ஏற்று செயல்பட வேண்டும்.
24. ஒரு போட்டி ஆட்டம் (match) நடந்து கொண்டிருக்கும் பொழுது, இடையிலே வேறொரு இடத்திற்குப் பந்தாடும் தரைப்பகுதியை (pitch) மாற்றி ஆடலாமா?
போட்டி ஆட்டம் தொடங்குவதற்காக நாணயத்தைச் சுண்டி விடுவதற்குமுன், பந்தாடும் தரைப் பகுதியை செம்மையுறத் தயார் செய்வதற்கான பொறுப்பை மைதான நிர்வாகிகள் ஏற்றிருக்கின்றார்கள்.
ஆட்டம் தொடங்கிய பிறகு அதனைக் கண்காணிக்கவும், ஆக்க பூர்வமான முறையில்அதைக் காத்துக்கொள்ளவும் போன்ற பொறுப்பினை நடுவர்கள் மேற்கொள்கின்றார்கள்.