பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

high level programming

217

history


நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் எந்த ஒன்றையும் இச்சொல்லால் குறிப்பிடுவர். உயர்திறன் தொழில்நுட்பம் எனில் அதிகவிலை என்பது நிலவும் சூழ்நிலையாகும்.

high level programming language:உயர்நிலை நிரலாக்க மொழி.

higher level software:உயர்நிலை மென்பொருள்.

high-level network:உயர்நிலைப் பிணையம்.

highlight changes:மாற்றங்கள் முனைப்புறுத்துக.

high memory area:மேல் நினைவகப் பரப்பு:ஐபிஎம் பீசி மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் ஒரு மெகாபைட் எல்லைக்கு அடுத்துள்ள 64 கிலோ பைட்டு பரப்பைக் குறிக்கிறது.டாஸ் 5.0 மற்றும் பிந்தைய பதிப்புகளில் HIMEM.SYS என்னும் நிரல்,டாஸ் இயக்க முறைமையின் சில தகவல்களை மேல் நினைவகப் பரப்பில் மாற்றிக் கொள்ளும்.இதன் காரணமாய் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்குக் கிடைக்கும் மரபு நினைவகப் பரப்பின் அளவு அதிகரிக்கும்.சுருக்கச் சொல்.ஹெச்எம்ஏ(HMA).

highpass filter:மேல்அலை வடிகட்டி: உயரலை சல்லடை:தகவல் சமிக்கையில் ஒரு குறிப்பிட்ட அலைவரிசைக்கு மேல் உள்ள அலைவரிசைகளை அனுமதிக்கும் ஒரு மின்னணு வடிகட்டி மின்சுற்று.

High Performance Serial Bus (1394): உயர் செயல்திறன் நேரியல் பாட்டை:பீசி மற்றும் மெக்கின்டோஷ் கணினிகளுக்கான நேரியல் பாட்டை இடைமுகம்.வினாடிக்கு 100,200,400 மெகாபிட் தகவல் பரிமாற்றம் சாத்தியம்.63 சாதனங்கள் வரை டெய்சிச் சங்கிலி அமைப்பில் இணைக்கமுடியும்.இவ்வாறு இணைக்கப்படும் சாதனங்கள் இடைமுகத்தின் வழியாக நேரடியாய் மின்சாரத்தை பெறமுடியும்.

high pitch:உயர் தொனி.

High Sierra Specification:உயர்நிலை சியாரா வரன்முறை:ஒரு குறுவட்டில் பதியப்படும் தருக்கக் கட்டமைப்பு,கோப்புக் கட்டமைப்பு மற்றும் ஏட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றின் தொழில்முறை வடிவாக்க வரையறைகள்.1985 நவம்பரில் டாஹோ ஏரிக்கு அருகிலுள்ள சியாரா என்னுமிடத்தில் நடைபெற்ற குறுவட்டு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.ஐஎஸ்ஓ 9660 பன்னாட்டுத் தரக்கட்டுப்பாட்டுக்கான அடிப்படையாக விளங்கியது.

high voltage:உயர் மின்னழுத்தம்:அதிக மின்னழுத்தம்.

HIPPI:ஹிப்பி:உயர் செயல்திறன் இணைநிலை இடைமுகம் என்று பொருள்படும் High Performance Parallel Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.மீத்திறன் (super)கணினிகளில் பயன்படுத்தக்கூடிய அன்சி தகவல்தொடர்பு தரவரையறை.

history:வரலாறு:கணினியில் ஒரு மென்பொருளில் பயனாளர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான பணிகளின் பட்டியல்.(எ-டு)1. இயக்க முறைமையில் உள்ளீடு செய்யும் கட்டளைகளின் தொகுப்பு.2.கோஃபர் கணினிகளில் ஒன்றன்பின்