உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


பட்டு, மென்மையும் மேன்மையும் எய்தியது போலவே, காலால் மட்டுமே ஆடப்பட வேண்டும் என்ற கட்டுத் திட்டத்தின்கீழ் கால் பந்தாட்டம் என்று பெயர் பெற்றது.

3. கூடைப் பந்தாட்டம்

டாக்டர் நெய்சுமித் எனும் அமெரிக்க உடற் கல்வி வல்லுநர், புதிய விளையாட்டு ஒன்றினைக் கண்டுபிடிக்கும் பெருமுயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் மேற் கொண்ட முயற்சி, பெருவாரியான அளவில் வெற்றியையே நல்கியிருந்தது.

ஒரு விளையாட்டுக்கு இலக்கும் பந்தும் மிக முக்கியம் என்ற முடிவுக்கு வந்த அவர், கால் பந்தாட் டத்தில் பயன்படும் பந்து ஒன்றினைப் பந்தாக பயன் படுத்த விழைந்தார்.

ஆட்டத்திற்கு இலக்கு ஒன்று வேண்டுமே! மற்ற எல்லா ஆட்டங்களிலும் தரையில்தான் இலக்குகள் (Goal) அமைந்திருந்தன. அந்த முறையிலிருந்து சற்று மாறுபட்ட வகையில் அமைக்க முயன்றார் டாக்டர் நெய்சுமித் அவர்கள்! இலக்கை, உயரத்தில் வைத்தாட 1891-ம் ஆண்டு முடிவு செய்தார். அதுவும் ஆடுவோரின் கைகளுக்கு