உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


எகிப்தில் டென்னிஸ்' என்று ஒரு நகரம் இருந் ததாகவும், அந்த நகரத்தை 12 26ம் ஆண்டு கடல் கொண்டு அழித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அக்காலத்தில், டென்னிஸ் ஆட்டத்திற்குரிய பந்தானது, துணிகள் நெய்யப்படும் நூலிழைகளால் தான் செய்யப்பட்டது. அந்த மென்மையும் அரு மையும் நிறைந்த நூலிழைகள் டென்னிஸ் நகரத் தில் இருந்து நிறையக் கிடைத்தன. அங்கிருந்துதான் டென்னிஸ் பந்து உருவாவதற்கான நூலிழைகள் வந்தன என்றும், அவைகளிலிலிருந்து கிடைக்கும் பந்தே ஆடுதற்கு மிகவும் செளக்கியமாக இருந்தது என்றும், அதனால் டென்னிஸ் நகர நூலிழைகள் டென்னிஸ் ஆட்டத்தில் பரிமளித்துப் பெரும்புகழ் பெற்றுவிட்டதால், டென்னிஸ் நகரத்தின் இந்தப் பெயரே, ஆட்டத்திற்கும் வந்துவிட்டது என்றும் கூறுவர்.

டென்னிஸ் நகரத்து நூலிழைக்கு இருந்த மதிப் பைச் சுட்டிக் காட்ட ஆங்கிலப் பழம் பாடல் ஒன்றையும் கூறுவார்கள்.

‘என்னுடைய மனைவி, அருமையான துணியால் ஆக்கப்பட்ட டென்னிஸ் பந்தைப்போல் இருக் முெள்' என்பதே அப்பாடலில் வரும் அடியாகும். இவ்வாறு, பல சூழ்நிலைகளையும் சுட்டிக் காட்டி, டென் னிஸ் என்ற பெயர் வருவதற்கான காரணங் களே பலர், பல்வேறு விதமாகக் கூறினலும், நம்மால் வி.-3