பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


விருந்துதான் பிறந்து வந்தது என்று உரிைமை கொண்டாடியும் பெருமை தேடவும் முயல்கின்றன.

சிலர் சைனுதான் பிலியர்ட்சின் தாயகம் என்றும் குறிப்பிடுகின்ருர்கள். கி. மு. 400 ம் ஆண்டில், கிரேக்கத்தில் சுற்றுப் பயணம் செய்த அணுகர்சிஸ் (Anacharsis) si görı usuri, பிலியர்ட்ஸ் என்ற ஒரு ஆட்டம் ஆடப்பட்டதைத் கான் கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிருர்.

அயர்லாந்தில் உள்ள செயின்ஸ்டர் என்ற நாட்டுப்பகுதியை (கி. மு. 148) ஆண்ட கட்கார் (Ca'kire More) என்ற அரசன், தான் இறக்கின்ற பொழுது, பித்தளையால் ஆன ஐம்பது பிலியர்ட்ஸ் ப. துகளேயும், பந்தாடும் கம்புகளையும் விட்டுச் சென்றதாக ஒரு வரலாற்றுக் குறிப்புக் கூறு கின்றது. பிலியர்ட்ஸ் என்ற பெயரே அப்பொழுது தோன்றவில்லை என்றும் சில சரித்திர ஆசிரியர்கள் கூறி, இந்தக் குறிப்பினையும் மறுக்கின்றனர்.

ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர் தனது புகழ்மிக்க நாடகமான "அந்தோணியோ கிளியோபாத்ரா'வில் கீ ழ் க் கண் ட வாறு ஒரு வசனத்தை எழுதியுள்ளார்.

கதை நாயகியான கிளியோபாத்ரா தனது தோழிகளை நோக்கி, "வாருங்கள், பிலியர்ட்ஸ் விளை பாடப் போகலாம்" என்று அழைக்கிருள்.