பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


தெய்வம் திருக்கோயில் கொண்டு வதியும் பதியாக கிரேக்கர்கள் நம்பியதால், அந்த மலைப் பக்கம் செல்வதோ, அல்லது மலை மீது ஏறுவதோ தெய்வ நிந்தனை என்று நம்பியதுடன், மிகவும் பக்திப் பெருக்குடன் அங்கு சென்றும், மற்ற நேரங்களில் செல்லாதும் வணங்கினர்.

அந்த ஒலிம்பியா பகுதியில்தான், கிரேக்கக் கடவுளர்களின் தலைமைக் கடவுளாக விளங்கிய சீயஸ் கோயிலும், 40அடி உயரத்தில் அமைந்த சீயஸ்ன் திருச்சிலையும் இருந்தன.

அக்கோயிலின் முன்னே அமைக்கப்பெற்ற விளையாட்டு அரங்கத்தில்தான், தூய கலப்பில்லாமல் பிறந்திருந்த கிரேக்க வீரர்கள் மட்டுமே, மிகவும் பக்தி சிரத்தையுடன் பங்கு பெறுகின்ற விளையாட்டுப் பந்தயங்கள் நடைபெற்றன.

போட்டியில் வெற்றி பெற்ற வீரனுக்குக் கிடைக்கின்ற பரிசோ, ஒலிம்பிக் பகுதியில், புனித ஆல்பியஸ் ஆற்றங்கரைப் பகுதியிலே விளைந்த `ஆலிவ்' மரத்தில் இருந்து எடுத்துத் தொடுக்கப் பெற்ற மலர் வளையத்தினை, தலையில் சூட்டப்படுவதுதான்.

பெறுகின்ற பரிசுகள் அனைத்தையும் விட, இந்தப் புனித ஆலிவ் மலர் வளையத்தைப் பெறு