இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
96
சடுகுடு ஆட்டம்
உதைத்தோ, தள்ளியோ தப்பிப்போய்விட முடியாது. தரையை விட்டு தூக்கப்பட்ட உடனேயே பிடிபட்ட ஆட்டக்காரர் தன் பலத்தை இழந்து விடுகிறார். அதனால் அவரால் தப்பித்துப் போக முடியாது. அதுவும் சற்று பலம் உள்ள ஆட்டக்காரர் பிடித்துவிட்டால், நிச்சயம் அவரால் பிடியிலிருந்து விடுபடவே முடியாது.
ஆ) ஆளைத் துக்கும் முறை (Lift Catch)
பாடி வருபவரின் ஒரு காலை வாய்ப்பான இடத்தில் வைத்துப் பிடித்துக் கொண்டவுடனே, மற்றொரு ஆட்டக்காரர் ஓடிவந்து அவரின் இடுப்புப் பகுதியைப் பிடித்து, இரண்டு பேருமாகச் சேர்ந்து அப்படியே ஆளை அலாக்காகத் தூக்கிக் கொள்கின்ற முறை, குழு ஒற்றுமையின் சிறப்பை எடுத்துக்காட்டும் முறையாகும்.