இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25
பதுபோன்ற துரத்தில் ஊன்றி, அதன் தலைப்பாகத் தில் ஒரு குச்சியையும் வைத்துவிட்டார்கள். ஆகவே
அதன் அமைப்பு
இப்படி இருந்தது.
இதற்கு விக்கெட் என்ற பெயரையும் சூட்டி விட்டார்கள். விக்கெட் என்ற ஆங்கிலச் சொல் லுக்கு கதவினுள் கதவு என்பது பொருளாகும். கதவு இருக்கும்போதே அந்தப் பெரிய கதவைத் திறக்காமல், கதவிலே ஒரு சிறு வழி அமைத் துக் குனிந்து செல்வதுபோன்ற அமைப்புள்ளதாகும். அந்த சிறு வழிபோன்ற அமைப்பினை இரண்டு முளைக் கம்புகளும் (Stump) உண்டாக்கி விட்டதால் கான்,விக்கெட் என்று அழைத்தனர்.
விக்கெட் என்ற அமைப்பில் இரு கம்புகள் பயன்பட, ஆட்டம் தொடர்ந்து நடந்து கொண்டி ருக்கும்பொழுது, 1775ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சி நடந்தது.
ஸ்மால் (Small) என்பவர் பந்தடித்தாடுபவர். லம்பி (Lumpy) என்பவர் பந்தெறிபவர். லம்பி பந் தெறிந்து வீச, ஸ்மால் பந்தடித்தாடிக் கொண்டி ருந்தார். லம்பி எறிந்த பந்தினை, ஸ்மால் என்பவ ாால் அடிக்க முடியாமல் போகும்பொழுது, அந்தப் பந்தானது கம்புகளைத் தட்டிவிடாமல், இரண்டு கம்புக்கும் இருக்கின்ற இடைவெளிக்குள்ளேயே பல முறை சென்று விட்டது.