உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


இங்கிலாந்துக்கு அ னுப்பி வைத்தவர்கள் *u-strfré;" சகோதரர்கள் நடத்திய நிறுவனமாகும். இங்கி லாந்தில் இந்தப் புதிய விளையாட்டை ஏற்று, நாடெங் கு ம் பரப்பிடு ம் பணியைப் புரிந்தவர்கள் 'ஹாம்லே சகோதரர்கள்' நிறுவனமாகும். இங்கிலாந்தில் இதற்கென்று பல பெயர்கள் உருவாயின. கோசிமா (Gossimo), விஃப் வாஃப் (Wil Whaft) என்ற கவர்ச்சிப் பெயர்களில், சில காலம் இந்த ஆட்டம் வளர்ந்து செல்வாக்குப் பெற்றது.

அதற்குப் பிறகு, மேசையில் ஆடுகின்ற இந்த மேசைப் பந்தாட்டம் பிங் பாங் (Ping Pong) என்ற ஒரு புதிய பெயரைப் பெற்றுக் கொண்டது.பந்தடிக் கின்ற மட்டையில் முதலில் பந்து படும் போது பின் என்ற ஒலியும், பிறகு மேசை மீது பந்து படும்போது பாங் என்ற ஒசையும் எழுவதால் தான் இதற்கு பிங் பங்' என்று பெயர் வந்தது என்ற ஒரு காரணத் தையும் சிலர் கூறினர். சிலர் இன்டோர் டென்னிஸ் என்றும், சிலர் பிங்பாங் என்றும் கூறி, தாங்கள் குழம்பியிருந்தது போல வே, மற்றவர்களையும் குழப்பி, ஆட்டத்தின் வளர்ச்சியையும் தடுத்துக் கொண்டிருந்தார்கள். பெயர் குழப்பமே பெரிதாக இருந்ததால், அதனைத் தவிர்க்க ஆதரவாளர்கள் ஒன்று கூடினர்.

1923ம் ஆண்டு பிரிட்டனில் ஆதரவாளர்கள் டி. இந்த ஆட்டத்திற்கு உரிய பெயர் என்ன