இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
85
அமைந்துவிடும். நழுவிக்கொண்டு போவதும் சிறிது கஷ்டமாக இருக்கும். ஆகவே, பிடிப்பவர் பாடி வருபவரின் நீட்டப்பட்ட கை வாய்ப்பாக அருகில் வரும்பொழுது, தனக்கு முன்னால் வந்ததும் அல்லது பக்கவாட்டில் சென்றாலும், சரியான நேரம் பார்த்து பிடித்துவிட வேண்டும்.
திடீரென்று பிடித்தாலும் பிடிக்கலாம்,அல்லது பிடிக்க முயல்வது போல ஏமாற்றி, உடனே எதிர்பாராத நேரத்தில் பிடித்தால், பாடுபவர் திகைத்துப்போய் நின்றுவிடுவார். அல்லது சக ஆட்டக்காரர்கள் வந்து சூழ்ந்து கொண்டுவிட, அவர் பிடிபட்டுப் போவார்.
ஆ) கைமாற்றி மணிக்கட்டைப் பிடிக்கும் முறை
முன் கையைப் பிடிக்கும் முறையில் சற்று மாறுபட்ட பிடி முறையாக இது பயன்படுகிறது.
வேகமாகப் பாடி வரும் ஆட்டக்காரர் தன் முழுக் கையையும் நீட்டி, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு