உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


45. முறையிலா பந்தெறியைக் குறித்துக் காட்டுகின்ற நடுவரின் சைகை எப்படி இருக்கும்?

நடுவர் தனது ஒரு கையை தரைமட்ட சம அளவில் நீட்டி சைகை காட்டுவார் (Horizontally).

46. எட்டாத பந்தெறி (Wide Ball) என்பதை விளக்குக?

பந்தடி ஆட்டக்காரர் காத்து நிற்கும் விக்கெட்டைக் குறிபார்த்துத்தான் பந்தெறிபவர் எறிய முயல்வார். அப்படித்தான் இருக்கவும் வேண்டும்.

ஆனால், விக்கெட்டுக்கு மேலே அதிகமான உயரத்திற்கும் மேலாக, அல்லது பக்கவாட்டின் இருபுறமும் பந்தடித்தாடுபவர் என்ன முயற்சித்தும், தனது விக்கெட்டைக் காத்து நின்றபடியே