பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


2000 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கிலாந்தில் பிலியர்ட்ஸ் என்ற சொல் குறிக்கப்பட்டிருக்கிறது என்றும், அதனால் இங்கிலாந்தே இதன் தாயகம் என்று கூறி வாதிடுவோரும் உண்டு. எப்படியிருந்தாலும், பிலியர்ட்ஸ் என்ற இந்த ஆட்டம், கோலிக் குண்டினை தரையில் உருட்டி குறியோடு ஒரு பொருளை அடித்தாடும் ஆட்டமான, பவுலிங் (Bowling) என்ற ஆட்டத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்பாரும் உண்டு. கிராகட் (Croquet) அல்லது ஷபுள் போர்டு (Shuttle board) என்ற ஆட்டத்திலிருந்து இது மாறி மருவித் தோன்றியிருக்கலாம் என அபிப்ராயப்படு வோரும் உண்டு.

பிலியர்ட் என்ற நார்மன் பிரெஞ்சுச் சொல் லுக்கு, குச்சி (Stick) என்பது பொருளாகும். கிராகட் என்ற ஆட்டத்தில் உள்ள வளைந்த தடியின் தலைப்பாகத்தைத் தட்டி நீக்கி விட்ட பிறகு, எஞ்சி யிருக்கின்ற நீண்டு நிமிர்ந்த குச்சிக்குத்தான் பிரெஞ்சு மொழியில் (Bille) பில்லி என்று அழைத் திருக்கின்றனர். எனவே, பிரான்சு தான், பிலி யர்ட்ஸ் ஆட்டத்தின் தாயகம் என்று உரைப்பாரும் உண்டு.

புவிலெட் (Bovillet) எனும் பிரெஞ்சு சரித்திர

ஆசிரியர், பிரெஞ்சு மொழிதான், இந்த ஆட்டத் திற்கு சொல் கொடுத்து உதவியிருந்தாலும், இந்த