உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


எட்வர்டு என்னும் மன்னன், இந்த ஆட்டத்தை வரவேற்றதோடல்லாமல், தனது அரண்மனையி லேயே ஒரு ஆடுகளத்தை (Court) அமைத்து தான் ஆடியதோடல்லாமல், தனது குடிமக்களேயும் ஆடும் படி தூண்டி உற்சாகப் படுத்தினான் என்பதாக வரலாறு ஒன்று எடுத்துரைக்கின்றது.

இந்த டென்னிஸ் என்ற சொல், ஆங்கில மொழியுள், ஏறத்தாழ கி. பி. 1400ம் ஆண்டு காலத்தில் தான் வந்திருக்க வேண்டும் என்றதோர் அபிப்பிராயமும் உண்டு. அப்பொழுது இங்கி லாந்தை ஆண்ட மன்னன் நான்காம் ஹென்றிக்கு வந்த கடிதம் ஒன்றில், டென்னிஸ் என்ற ஒரு சொல் இருந்ததாகவும் கூறுகின்றனர்.

1370-ம் ஆண்டுக்கு முன்னர், இத்தாலிய எழுத் தாளர் ஒருவர் எழுதுவதுபோல, துள்ளாட்டம் நிறைந்த பந்தாட்டம் ஒன்றை அங்கு புதிதாக வந் திருந்த குதிரைப் படையினர் ஆடினர். அதிலிருந்து தான், டென்னிஸ் என்ற ஆட்டம் இந்தப் பகுதியில் இடம் பெற்றது என்றும் அவர் குறிப்பிடுகின்றர்.

இவ்வாறு பல்வேறு குறிப்புக்களையும், காரணங் களையும் கூறுகின்ற சரித்திர ஆசிரியர்களுக்கிடையே, இன்னும் ஒரு புதிய கருத்தும் புகுந்து உலா வரு கின்றது. அதனையும் காண்போம்.