பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

 மண்டை ஓடுகள் உதைபட்டு ஓடும் பொருட்களாக அமைந்தன. புதிய புதிய மண்டை ஓடுகள் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த ஆட்டத்திற்கு 'டேன் மண்டை ஓட்டை உதைத்தல் (Kicking the Dane's Head) என்ற பெயர் வந்தது.

மண்டை ஓட்டை உதைப்பதால் காலில் வலியும் எரிச்சலும் ஏற்பட்டபோது, காலணிகள் (Shoes) அணிந்தும் வலி போகாத நிலையில், இந்த ஆட்டத்தில் அதிகப் பற்றும் பாசமும் கொண்டிருந்த ஒரு இளைஞன், காற்றடித்த பசுத் தோல் பை (Inflated Cow Bladder) ஒன்றைக் கொண்டு வந்தான். பந்து வடிவம் கொண்ட அது, உதைத்து ஆட எளிதாக இருந்ததால், மண்டை ஓடு மறக்கப்பட்டது. பசுத் தோல் பை, பந்தாக மாறியது.

இந்த ஆட்டத்திற்குத் தோல் பையை உதைத்தாடல் (Kicking the Bladder)பிறகு மாறி வந்தது.

கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு பந்தும் ஆட்டமும் ஒரு முறையான அமைப்பினைப் பெற்ற பிறகு, காலால் மட்டுமே உதைத்தாடும் தன்மையில் அமைந்ததால் புட்பாலி (Fபt Balle) என்று அந்நாளில் புதுப் பெயர் நிலவி வந்தது.

அன்றைய ஆங்கிலச் சொல்லே பிறகு மாறி (Foot Ball) ஆகி வந்தது. ஆட்டம் சட்டத்திற்குட்