உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

சடுகுடு ஆட்டம்


கால்களையும் பிடித்தவுடன் அப்படியே ஆளை அலாக்காகத் துக்கிவிட்டால், பிடிபட்டவர் உடல் சமநிலை இழந்து, எதுவும் செய்ய முடியாது செயலற்றுப்போய் ஆட்டமிழந்துவிடுவார்.

3. இடுப்புப் பகுதி பிடி முறை

அ) இடுப்புப் பிடி முறை (Trunk Catch)

இடுப்புப் பிடி முறையானது, பத்திரமான, மிகவும் பாதுகாப்பான பிடி முறையாகும். இந்த முறையுடன் சரியாகப் பிடித்துவிட்டால், பாடி வருபவரைப் பக்குவமாகப் பிடித்து மடக்க ஒரு ஆளே போதும். மற்றவர்கள் உதவியோ, துணையோ எதுவும் இந்த நேரத்திற்குத் தேவையில்லை.

ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு முன்புறம் பார்த்தே பாடிப் போகும் ஆட்டக்காரர், பின்புறம் யார் இருக்கிறார், எப்படி வருகிறார் என்பதைப்