டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
99
இந்த பிடிக்கும் அகப்பட்டவர் தப்பித்துப்போக வழியும் இல்லை. வாய்ப்பும் கிடையாது. அதனால், நன்கு கற்றுக்கொண்ட பிறகே, இந்தப் பிடிமுறையை ஆட்டத்தில் பயன்படுத்த வேண்டும்.
ஈ) கோழி பிடிக்கும் (அமுக்கும்) முறை (Hen Hold)
பாடி வரும் எதிராட்டக்காரர், கீழே மண்டியிட்டோ அல்லது முழங்கால் மடிய தரைக்கு மேலே சற்று அமர்ந்தவாறோ, பிடிக்க இருப்பவர்களைத் தொட முயற்சிக்கும்பொழுது, கோழியை அமுக்கிப் பிடிப்பது’ போல பிடித்து விடும் முறைக்குத்தான், கோழி பிடிக்கும் முறை என்று கூறப்படுகிறது.
பாடிக் கொண்டிருப்பவர் முன்னே கூறிய முறையில் இருக்கும்பொழுது, அவர் பாராத சமயத்தில் திடீரென்று தாக்குதலை நடத்திப் பிடித்துவிட வேண்டும். அதாவது ஒரு கையால் இடுப்புப் பகுதியைப் பிடித்து, மற்றொரு கையால் கழுத்து பிடரிப் பகுதியையும் அழுத்தி அவரால் மேலே எழுந்திருக்க முடியாதவாறு அழுத்திவிட வேண்டும்.
அவர் கழுத்தைப் பின்புறம் பிடித்தவாறு, தனது உடல் எடை முழுவதையும் பாடுபவர் மேல்பட்டு கீழ்நோக்கி அழுத்தும்போது, அவர் உடல் சமநிலை இழந்து, தடுமாறி விழுந்து பாட்டை நிறுத்துவதுடன், விடுபட்டுப் பிடியிலிருந்து வெளியேறும் முயற்சியையும் நிறுத்திவிடுவார்.
அந்தக் ‘கோழிப்பிடி’ முறை பொதுவாக அபூர்வமாக ஆட்டத்தில் நடைபெறும் சம்பவமாகும். மிகவும் கடுமையான பிடிமுறையாக இது பயன்பட்டாலும்,