4
[ ] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?
இன்று, உலக மக்களிடையே ஒர் ஒப்பற்ற விழிப் புணர்ச்சி தோன்றியிருக்கிறது.
“மனித இனத்தை வாழ வைக்கின்ற சக்தியும், மனித இனத்தை ஒற்றுமைபடுத்துகின்ற ஆற்றலும், மனித இனத்தை நோயினின்றும் சோம்பலினின்றும் காக்கின்ற வல்லமையும் விளையாட்டுக்களிடம்தான் வீறு கொண்டு விளங்குகின்றன’ என்று உலகம் உணரத் தொடங்கியிருக்கின்றது.
அதனால்தான் புதிய ஒலிம்பிக் பந்தயம் பிறந்தது. உல கெங்கும் விளையாட்டு விழாக்கள் விமரிசையாக நடத்தப் பெற்றன. வீரர்களும் வீராங்கனைகளும் வீரமுடன் வந்து கலந்து கொண்டனர். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்”, எல்லோரும் ஒன்றே குலந்தான் என்ற தமிழ்ப் பண்பாட்டை விளையாட்டுலகம் நிரூபித்துக் காட்டிவிட்டது.
இந்திய நாடு விளையாட்டுக்களில் இருந்த நிலையிலே இருக்கிறதா, எழுச்சி பெற்றிருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்டால், இப்பொழுதுதான் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் கூற முடியுமே தவிர வேறென்ன கூறமுடியும்?
மக்கள் தொகையிலே உலகைக் கவர்ந்திழுக்கினற நமது தாயகம், மாபெறும் உடலாண்மைப் போட்டிகளிலே எந்த நிலைமையில் என்று கேட்டால், தலையைக் கவிழ்த்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
அந்த நிலை மாற வேண்டும், விளையாட்டு விழாக்கள் நாடெங்கும் விமரிசையாக நடத்தப் பெற வேண்டும் வீடெங் கும் பெருகி, உலகெங்கும் புகழைப் பரப்ப வேண்டும்.
இந்து ஆவல் நிறைவேறினால், பாரதம் இன்னும் ஆன்ற புகழில் திளைக்கும். புண்ணிய நாட்டின் மேன்மையும், பழமை காலப் பெரும் புகழும் நிலைக்கும்.