26 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?
குறைந்தது 10 மீட்டரும், (32-10) அகலமானது 2.75 மீட்டரும் (9') இருக்க வேண்டும்.
தாண்டிக் குதிக்கின்ற பரப்பளவின் மேல் பகுதியெல்லாம் மென் மணலால், அல்லது மென் தரையால், அல்லது ரம்பத்தூளால் மூடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மணலால் சூழப்பட்டப் பரப்பளவு, ஒடிவருகின்ற தரைக்கு சற்று மேடாக அமைந்திருக்க வேண்டும.
தாண்ட உதவுகின்ற உதைத்தெழும் பலகை யானது (Take off Board) மரத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன் அளவு 4 அடி நீளமும், 8 அங்குலம் அகலமும் உடையதாக அமைந்திருக்க வேண்டும்.
வெள்ளை வண்ணப் பூச்சினைப் பெற்றிருக் கின்ற அப்பலகையானது, தாண்டுகின்ற இடத்தின் தரையளவாக அதாவது தரையோடு தரையாகவே பதிக்கப்பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாலே தயார் செய்து கொண்ட பிறகு, போட்டி நடக்கின்ற நாளன்று எப்பொழுதும் ஈர மணலை வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.
ஏனெனில், தாண்டிக் குதிப்பதற்காக ஒடி வரும் உடலாளர்கள், கட்டைக்குப் பின்புறம் கரைபோல் வைத்திருக்கும் மணற் பகுதியை மிதித்து விடுவார்கள். அவ்வாறு அந்த மணற் கரையை மிதித்து, காலானது எல்லையைக் கடந்துவிட்டால், அவரது முயற்சி தவறானது (Foul) என முடிவு கட்டவும், மீண்டும் முன்போல் கரையமைக்கவும் ஈர மணல்