வள்ளுவர் வணங்கிய கடவுள் 127
முயலவே, ஐம் பொறிகளையும் பயன்படுத்துகிற ஆற்றல் கொண்டவர்களே, ஞானகுருவாகத் திகழ்கிறார்கள்.
அத்தகையோர் காட் டுகின்ற செம்மையான நெறிகளிலே, சீரான பாதைகளிலே, சிந் தை கலந்து, செயல் புரிந்து வாழ்கிற போது, எண்ணிய திண்ணம் போலவே, எல்லாம் காய்க் கும். பண்ணிய புண் ணியங்களின் பயனாகவே, பல வளங்களும் நலங்களும் வாய்க்கும்.
ஆகவே, ஐம் பொறிகளின் ஆற்றலை அடக் கித் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் வைக் கும் தேவ வலிமையே முக்கியத் தேவை என்று முன் குறளில் விளக்கினார் வள்ளுவர்.
வல்லமை மிகுந்த உடலில் தான், வலிமையான மனம் அமையும் என்பதற்கேற்ப, வலிமையான மனதால் தான் வரிக் குதிரைகளாகப் பறக்கும் வலிய சக்திகளைக் கொண்ட பொறிகளை அடக்கும் ஆற்றல் சித் திக் கும் என்ற அருமையான குறளை, அடுத்துப் பாடி வைத்தார்.
உரன் எனும் தோட் டியால் ஓர் ஐந்தும் காப்பான் (24)
என்ற குறளின் பொருளைப் பாருங்கள்.
உரன் என்றால் வலிமை, பலம், திண்மை, ஊக்கம் என்றெல்லாம் பொருள்கள் உண்டு. தோட்டி என்றால் காவல், கதவு, ஆயுதம் என்றும் பொருள்கள் உண்டு.
வலிமை மிகுந்த (உடல் வலிமை) பலத்தையும்,