28
மொழியில் காக்கெட் (Hoquet) என்ற ஒரு ஆட்டம் ஆடப்பட்டு வந்தது. அந்த காக்கெட் என்ற சொல்லுக்கு இடையரின் கைக் கோல்’ என்பது பொருளாகும்.
இடையர்களின் கையில் உள்ள நீண்ட கோலானது, தலைப்பாகத்தில் சற்று வளைந்திருக்கும் அமைப்பினை உடையதாகும். அவர்கள் ஆடுமாடுகள் மேய்க்கச் செல்கிற பொழுது, உயரமான மரத்தில் உள்ள இலை தழைகளை வளைத்துப் போடவும், ஆடு மாடுகளே ஒட்டி வளைக்கவும், மற்றும் கீழே கிடக்கும் பொருள்களே அடித்துத் தள்ளி மகிழவும் பயன் பட்டது.
தலைப் பாகத்தில் வளைந்த கோலினைக் கண் டதும், இடையரின் கோல் நினைவுக்கு வந்ததோ என்னவோ, அதனை 'காக்கெட் என்று அழைத் தனர் போலும்.
பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் அதிக போக்கு வரத்து இருந்த காரணத்தால், இந்தக் காக்கெட் ஆ ட்டம் பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கு வந்திருக்க வேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
'காக்கெட்' என்ற பிரெஞ்சு சொல்லுக்கு காக்கே என்பது தான் உச்சரிப்பாகும். அதாவது Hockey என்றும், அதனை ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் ஹாக்கி என்றும் உச்சரித்தனர்.