பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


ஆடப்பட்டு வந்ததாக ஒரு குறிப்பு. இதை நாட்டுப் புற மக்கள் மிகவும் விரும்பி ஆடி வந்ததாகவும், அவர்கள் இந்த ஆட்டத்தை எந்த இடத்திற்கு வேண்டுமானலும் எடுத்துச் சென்று ஆடுதற்கேற்ற வறு இருந்ததால்தான் இதனை எல்லோரும் ஆடினர் என்றும் கூறுகின்றனர்.

காம்பகா (Cambuca) என்று ஒரு ஆட்டம், கோல்ப் ஆட்டத்தின் முன்னேடியாக அமைந்திருக்கலாம் என்று தாமஸ்ரைனர் என்ற ஒரு சரித்திர ஆசிரியர், தனது 'போயடிரா, (Foedera) எனும் நூலில் கூறி. பிருக்கிருர், இது மூன்ரும் எட்வர்ட் மன்னர் ஆட்டுக் காலத்தில் ஆடப்பட்டு வந்திருக்கிறது. எண்பது அவரது குறிப்பாகும்.

சர் கைகாம்பெல் (Sir guycampbeli) என்பவர் இந்த காம்பகா என்ற ஆட்டமே, கோல்ஃப் ஆட் தின் ஆரம்பத்திற்கு அடிப்படையாக இருந்தி முக்கலாம் என்றும் அபிப்பிராயப்படுகிறார்.

பிரான்சு நாட்டில் ஆடப்பட்டு வந்த ஒரு விளை ாட்டின் பெயர் ஜூடிமேல் (Jeude mail) என்பது. இந்த ஆட்டம் பிலியர்ட்ஸ் போலவும், கிராகட் என்ற ஆட்டம் போலவும், கோல்ப் ஆட்டம் போல அம் விளயாடப்பட்டது. ஒவ்வொரு ஆட்டத் திலும் பயன்படுகின்ற நீண்ட அல்லது வளைந்த தடி ஒன்று தான் முக்கியமான ஆடும் சாதனமாகவும் விளங்கி யிருக்கிறது.