உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


என்பதை நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டு, பிங்பாங் என்ற பெயரையும் தவிர்த்து விட்டு,' டேபிள் டென்னிஸ்’ என்ற புதிய பெயரைச் சூட்டினர். இந்த மேசைப் பந்தாட்டம் என்ற பெயரே அந்நாளிலிருந்து பிரபலமாகி, உலக மேசைப் பந்தாட்டக் கழகத்தையும் 1926ம் ஆண்டு பெர்லின் நகரில் உருவாகும்படி செய்து விட்டது.

10.பேட்மின்ட்டன்(Badminton)

பேட்மின்ட்டன் என்றவுடன் பூப்பந்தாட்டம் (Bas Badminton) என்றும், இறகுப் பந்தாட்டம் (Shuttle Badminton) என்றும் நமக்கு நினைவுக்கு வருகிறது.

ஏறத்தாழ 1880ம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் ஆடிவந்த ஒரு ஆட்டத்திற்குப் பெயர் "பூன' (Poona) என்பதாகும். இந்த ஆட்டத்தை இந்தியர்கள் விரும்பி ஆடியது போ ல வே, இந்தியாவில் அப்பொழுது தங்கியிருந்த ஆங்கிலேய, இராணுவ அதிகாரிகளும் ஆர்வமுடன் ஆடி மகிழ்ந்: திருந்தனர்.

அப்பொழுது, அவர்கள் ஆடப் பயன்பட்டுவந்த பந்தானது, மதுப் புட்டிகளே அடைக்கும் கார்க்கு