வள்ளுவர் வணங்கிய கடவுள் 177
2. ஐம் பொறிகளை அடக்கி வாழ்கின்றவர்களை ஐம் பொறி அடக்கி என்றனர்.
அவர்களை இல்லறத்திலிருந்து துறந்து வந்தவர் என்றும், துறவி என்றும் பெருமைப்படப் பேசினர்.
f
துறவிகள் இல் லற சுகத்தை, உதவும் பொருள்களை, செல் வங்களை, மற்றும் உறவினர் களுடன் உலா வருவது போன்ற காரியங்களைத் துறந்து தான் வந்தார்களே தவிர, முற்றிலும் நினைவுகளிலிருந்து அகற்றிடாத வர்களாகவே இருந்தனர்.
அதை இல்லறம் தள்ளிய, துறவறம் என்றனர். அவர்களையே துறவோர் என்றனர்.
3. மூன்றாவது நிலை அறவறம் . துறவறம் மேற் கொண்டு வந்த பிறகு, அகத்திலே ஒட்டிக் கொண்டிருக்கும் ஆசாபாசங்களை அறுத் தெறிகிற ஆற்றல் கொண்டவர்களை, அறவே அழிக் கின்ற பற்றற்றவர்களாக ஆனவர்களை அறவோர் என்றனர்.
அறவோருக்கும் மேலாக இறுத்துப் போடுகின்ற இகலோக இச்சைகளையெல்லாம் இற்றுப் போகச் செய்கின்ற இறைவனாக, ஆசானாக, குருவாக, அரசனாக, தலைவனாக, ஆனவரை இறவோர் என்று நாம் அழைக்கலாமே.
இப் படிப் பட்ட ஆற்றல் பெற்ற இறைவனின் அடியாகிய ஞானத் தைப் பெறாதவர்கள், பெருங் கடலை நீந்த முடியாதே!
இங்கே சேராதார் என்ற ஒருசொல் வந்திருக்கிறது. சேர்தல், சேர்ந்தார் என்பதற்கு, இடைவிடாது