பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா D 133


வோருக்குச் சொல்லுகின்ற முறையையே, வலது கையை முன்னதாக பயன்படுத்துவோர் ஏற்றவாறு மாற்றி வைத்துப் பழகுக).


16 அடிக்கு மேலே தாண்டுவோர் எல்லாம், உயர ான கோலின் 13 அல்லது 14 அடி உயரத்தில் தான் கைப் பிடியை வைத்திருக்கின்றனர் என்றும், அதற்குக் கீழான உயரம் என்றால், இன்னும் ஒரு அடி கீழே இறக்கிப் பிடித்துக் கொள்வார்கள் என்றும் கூறுகிறார்கள். 10 அடிக்கும் கீழே தாண்டுவோருக்கு 7 அல்லது 8 அடி உயரத்தில் பிடிப்பு (Grip) இருந்தால் போதும். அதற்குக் ழே தாண்ட வேண்டும் என்றால், கோலினை எந்த யரத்தில் பிடித்துக் கொண்டு தாண்டினால் வசதியாக இருக்கும் என்பதை பலமுறை பரிசோதனை செய்து பார்த்து, பிறகு தெளிவு பெறுக.


ஆக, கோலினை எந்த உயரத்தில் பிடிப்பது என்ற கேள்விக்கு அது தனிப்பட்டவரின் உயரத்தையும், அவரின் கைவலிமையையும் பொறுத்து அமையும் என்பதை உணர்ந்து கொள்க.


எந்த இடத்தில் பிடிப்பது என்று உணர்ந்தவுடன், எவ்வாறு பிடிப்பு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுவது இயற்கையே.


நீண்ட அந்த கோலினை சாய்வாகத் தாழ்த்தித் தேவையான இடத்தைத் தேர்ந்து கொண்டு, அடிவயிற் றுக்கருகே அந்தப் பிடிப்புப் பகுதியை இருத்தி அங்கே இடது கையின் உள்ளங்கை கீழே மண்ணைப் பார்ப்பது


போல சுற்றிப் பிடித்து, இடுப்புக்குப் பின்னே வலது கையை மடக்கி, வலக்கையின் உள்ளங்கை ஒரு சிறிதளவு