பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



விளையாடாத பேர்கள் எல்லாம், எப்படி வாழ்நாளை விண் நாட்களாகப் போக்கியிருக்கின்றார்கள் என்று புரிந்து கொள்ளவும் உதவும். அவர்களின் பேதமையும் புரியும்.


1 . உடல் திறன் வளர்க்க!


உடலில் இயற்கையாக உள்ள திறன் நுணுக்கங்களை வளர்த்துக் கொள்ள, உடலில் சக்தியினையும், ஆற்றலை யும் பெருக்கிக் கொள்ள, விளையாட்டு உதவுகிறது என்று முன்னர் கூறினோம்.


காலையில் எழுந்தவுடன், மெது ஒட்டம் ஒடுபவர்கள். நீச்சல் பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள். உடலழகுப் பயிற்சி களை முறையாகத் தொடர்ந்து செய்து வருபவர்கள், விளையாட்டுக்களுக்கான சங்கங்களில் சேர்ந்து கொண்டு தினம் பயிற்சி செய்பவர்கள் எல்லாம், தங்களது தேக நலத்தைப் பெருக்கிக் கொண்டு உடல் தகுதியை (Fitness)த் திறமாக்கிக் கொள்ள, வாய்ப்பாக்கிக் கொள்கின்றார்கள்.


ஆக, விளையாடுவதற்கான முதல் காரணம் உடல்


நலம் பெறவும், திறம் பெறவும் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.


2. வேடிக்கை கேளிக்கைக்காக!


விளையாடுவது மகிழ்ச்சிக்காக என்றோம். தமது திறமையை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, பொருதி நின்று, வெற்றியா தோல்வியா என்று அறிந்து கொள்ளவும் உதவும் என்றோம்.


ஆனால் ஒரு சிலர், மற்றவர்களை சந்திப்பதற்கு ஒரு உகந்த வாய்ப்பாக, விளையாட்டில் பங்கு பெறுவதை விரும்புகிறார்கள். பெரியவர்களுடன் அல்லது வசதியுள்ள