உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விளையட்டு விழா நடத்துவது எப்படி?


பந்தயப் பாதையில் ஒடும் ஒட்டக்காரர்கள் அனைவரும், இடது கைப்புறமாகத்தான் (Left Hand) வளைந்து ஒட வேண்டும்.

பந்தயப் பாதையினை அளக்கும்போது, முதல் பாதையில் உள்ள விளிம்பிலிருந்து (30 செ.மீ) 3 அடி தூரம் அளந்து சுண்ணாம்புக்கோடு போட்டிருக்க வேண்டும். அந்த சுண்ணாம்புக் கோட்டைக் கடந்து, முதல் பாதையில் ஒடுபவர் ஓடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது பாதையிலிருந்து, அந்தக் கோடுகளின் வெளிப்புறத்திலிருந்து (20 செ.மீ) 8" தான் அளந்து கொள்ள வேண்டும். வலது புறம் உள்ள ஒவ்வொரு ஒடும் பாதையின் சுண்ணாம்புக் கோடுகள், அந்தப் பந்தயப் பாதையின் அகலமாகும் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

தாண்டும், எறியும் போட்டிகளுக்கானக்குறிப்புகள்

 தாண்டும் போட்டிகள்
     தாண்டுவதற்காக நடத்துகின்ற போட்டிகளுக்குத் தேவையான பொருட்களைத் தயார் செய்வதற்கு முன், இவைகளை நடத்துகின்ற இடங்களை நிர்ணயிப்பதற்கு முன், ஒருசில குறிப்புக்களை நன்கு ஆராய்ந்தே முடிவு செய்யவேண்டும்.

இவ்வாறு தேர்ந்தெடுத்து அமைத்தால்தான், பார்வையாளர்களில் ஒரு சாரார், ஒரிரண்டு