இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
182
14. தெய்வத்தைத் தேடிய திருவள்ளுவர்
தெய்வத்தைத் தேடினார் திருவள்ளுவர்
என்பது திருக்குறள் முழுவதும் தெள்ளத் தெளிவாய் தெரிகிறது!
முதலில் தெய்வத்தை தேடினார். தெய்வத்தை யாருக்காக அவர் தேடினார் ? தனக் காகவா இல்லையே!
அவரே, ஒரு தெய்வப் புலவர் இல்லையா! பின் எதற் குத் தேடவேண்டும் இந்தக் கேள்விக்கு விடைதான் அவர் அருளிய குறட்பாக்களாகும்.
எத்தனையோ ஆயிரக் கணக்கான தமிழ் ப் புலவர்கள், சான்றோர்கள், வள்ளுவருக்கு முன்னும் பின்னும், சமகாலத்திலும் வாழ்ந்திருக்கின்றார்கள்.
அவர்களுக்கெல்லாம் தரப்படாத அடைமொழி, புகழ் மொழி திருவள்ளுவருக்கு மட்டும் எப்படி கிடைத்தது! -