உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 181

இறைவனடி சேராதார் நீந்தார் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் வள்ளுவ நாயனார்.

பிறவி என்கிற பெருங்கடல். அதில் நீந்துகிற பக் குவமும் பயிற் சி யும் , குருதேவராகிய (இறைவனின்) ஞானத் தைப் பெறுகிற போது, மிகுதியாகக் கிடைக்கிறது. அதுவே புகழ் பெற்று வாழ்கிற தகுதியைத் தந்து விடுகிறது. இறைவனின் ஞானம் பெறாதவர்கள், நீந்த முடியாமல், அமிழ்ந்து போகின்றனர்.

ஆகவே, குருதேவரின் ஞானமே, குல விளக்காகும். நல விளக்காகும். நல் வாழ்வுக்குரிய நந்தா விளக்காகும். அந்த ஞான ஒளியைப் பெறுவதும், வாழ்வாங்கு வாழ்வதும் மனிதப் பிறவி எடுத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இலக்காகும்.