பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

நிற்கும் போது, மனம் எரிச்சலின் எல்லையில் அல்லவா போய் நிற்கும்!

இப் படிப் பட்ட எதிர் பார்ப்புகளும் , ஏமாற்றங்களும், புதிர்களும், புற் றீசல் போல் வருகின்ற பிரச்சினைகளும் தான் ஒருவரை கவலை யெனும் கடலுக் குள்ளே மூழ்கடித்து விடுகின்றன.

கவலைகளுக்குள்ளே கூடு கட்டிக் கொண்டு, பாடு பட்டுக்கொண்டு பரிதவிக்கிற, பாழ் பட்டுப் போகிற மக்கள் கூட்டம் தான் உலகிலே அதிகம்.

கவலைகள், பிரச்சினைகள் என்கிற கடுமையான சிங்கத்தின் வாயைக் கிழித்து, அதன் மேல் அமர்ந்து கொள்கிற ஆற்றல் கொண்டிருப்பவர்கள், வெகு சிலர் தான்.

அத்தகைய ஞானத் தை, ஞானமெனும் ஆயுதத்தை, வழங்கி ஆட் படுத்துகிறவர் தான், இறைவனாகிய குருதேவர் ஆவார்.

குருதேவரின் ஞானம், பிரச்சினைகளின் மேலே பாய் விரித்து அமர்ந்து கொண்டு, ஆளுகின்ற ஆண்மையை அளிக்கிறது. இது, தண்ணிரில் மிதக்கக் கற்றுத் தரும் நீச்சல் ஞானத்தைப் போல.

இந்த ஞானம் கிடைக்காதவர்கள், முதலில் தண்ணிரிடம் நெருங்கவே பயப்படுவார்கள். பிறகு, தண்ணிரில் இறங்கப் பயப்படுவார்கள். பிறகு, தண்ணிரில் இறங்கினாலும், அதில் மிதக் கத் தெரியாமல், மூழ்கிப் போய் விடுவார்கள். ஆமாம், அமிழ்ந்து போய் மிதந்து விடுவார்கள்.