பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் I79

உழைக்க, பிறருக்கும் பயன்பட முடிகிறது. தன்னாலும் திறம்பட மேலோங்கி எழ முடிகிறது.

ஆக, வலிமையான உடலோடு, உறுதியான மனத் தோடு வாழ் பவர்களே, பெருங்கடலை, பெருந்துன்பமின்றி நீந்த முடியும்.

கடலிலே அலைகளுக்குக் குறைவே இல்லை. ‘அலை ஒய்வதெப்போ தலை முழுகுவது எப்போ’ எனும் பழமொழி, கடலில் குளிப்பதற்கான கடுமையான நிலையை விளக்கிக் காட்டுகிறது.

கடலின் கரையிலிருந்து குளிக்கலாம். கடலில் இறங்க முடியாது என்கிற நிலை இருக்கிற போது, கடலுக்குள் இறங்கி, மிதந்து, நீந்தி, எதிர்த்து வரும் அலைகளில் ஏறி, முன்னேறிச் செல்ல, தைரியம் மட்டும் போதாது. தாங்குகிற தேக சக்தியும் தேவைப்படுகிறதே!

தண்ணிரில் நீந்துவதற்கு முன்னதாக, தண்ணிரில் மிதக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது விதி. அதுபோலவே, வாழ்க்கையைத் தந்துள்ள இந்தப் பிறவியில், வருகின்ற பிரச்சினைகளும், குழப்பங்களும் கொஞ்சமாகவா இருக்கின்றன? அவற்றில் மிதக்க முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒன்றை நினைக் கின் அது ஒழிந் திட்டு வேறொன்றாகும்.

எதை நாம் நினைக்காமல் இருக்கிறோமோ, அதுதான் முன்னே வந்து நிற்கும். எதிர்பார்த்தது கிடைக்காத ஏமாற்றத்தை விட, வேண்டாம் என்று வெறுப்பதே முன் வந்து பல்லைக் காட்டிக் கொண்டு