2. விழாக் குழுவும் வேலை முறைகளும்
விளையாட்டுப் போட்டியை வெற்றிகர்மாக நடத்தி முடிக்கின்ற பெரும் பொறுப்பினை விழாக் குழுவே ஏற்றுக் கொள்கிறது. விழாக் குழுவினர் என்பவர்கள் விழா நடத்துகின்ற நிறுவனங்களி லிருந்து வரும் அங்கத்தினர்களேயாவர்.
பள்ளியிலே நடைபெறுகின்ற விளையாட்டு விழா நிகழ்ச்சிக் குழுவில், ஆசிரியர்கள் அனைவருமே ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.பணியாற்றுகின்றனர். பரபரப்புடன் செயல்பட்டு, விழாவின் வெற்றிக்கு முக்கிய காரண கர்த்தாக்களாகின்றனர்.
தனிப்பட்ட பள்ளியைப் போலவே, பள்ளிகளுக்கிடையே நடைபெறுகின்ற உடலாண்மைப் போட்டி நிகழ்ச்சிகளின் விளையாட்டு விழாவினை நடத்துகின்ற பொறுப்பை, ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் பிரதிநதியாக வரும் ஆசிரியர்கள் (உடற் கல்வி ஆசிரியர்கள்) அனைவரும் சேர்ந்தே ஏற்றுக்கொள்கின்றனர். ஆகவே அதுவே விழாக் குழுவாகும்.
பள்ளிகளுக்கிடையே நடக்கின்ற விழா போல் தான் கல்லூரிகளுக்கிடையிலும், தொழிற்சாலைகளுக்