46 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?
இருக்கைகளையும் அமைத்திருக்க வேண்டும். போட்டிக்குப் போகும்பொழுது, தங்களுக்குரிய துணி மணிகளைக் கழற்றி அங்கே விட்டு விட்டுப் போவதற்குரிய கயிறு கட்டி வைப்பதும் சிறப்பாகும.
இன்னும், உடலாளர்கள் ஆடைகளை மாற்றிக் கொள்ளத் தனியிடமும், கழிவறைகளும் அருகருகே இருக்குமாறு இடவசதிக் குழு ஏற்பாடுகளைச் செய்து வைக்க வேண்டும்.
4. நிகழ்ச்சி filséo (50p (Programme Committee)
அனைத்துப் பள்ளிகளுக்கும், பின்னர் அனுப்பி வைக்கப் பெற்ற உடலாளர்களின் பெயர்ப் பட்டியலும், பதிவுத் தாள்களும் வந்து சேர்ந்த பிறகுதான், இக்குழுவின் பணி தொடங்குகிறது.
வந்து சேர்ந்த பெயர்ப் பட்டில்களையும், பதிவுத் தாள்களையும் முழுதும் படித்து, அந்தந்த நிகழ்ச்சிகளில் பெயர் கொடுத்தவர்களை யெல்லாம் ஒன்றாகத் தொகுத்து விட வேண்டும்.
ஒட்டப் பந்தயங்களின் விரைவோட்டத்தில் பங்கு பெற்றவர்களை யெல்லாம் தொகுத்து, அவர்கள் ஒடக்கூடிய' ஒட்ட வரிசை முறை'யைத் (Heats) தந்து, மொத்த உடலாளர்களின் எண்ணிக்கையை அறிந்து, அதற்கேற்ப நிகழ்ச்சியை நிறைவுபடுத்தி வைக்க வேண்டும்.
அவ்வாறு எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கெடுப் போரை எழுதி வைத்துக் கொண்ட பிறகுதான்,