பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 177


B 2


தலைத் தசைகள் முதலியவற்றிற்கான எடைஏந்தி'யால் (Bar bell) கடினப் பயிற்சிகள் செய்யவேண்டும். அடி வயிற்றுக்கான பயிற்சிகளும் மிகமிக அவசியம்.


விரைவோட்டக்காரருக்கு வேண்டிய பயிற்சிகள்


அத்தனையும் செய்யவேண்டும். இரும்புக்குண்டு எறி


வோர், தட்டெறிவோர் செய்யும் பயிற்சிகளை மிகுதியாகச் செய்ய வேண்டும்.


வாரத்திற்கு இருமுறை எறிந்து பழகுக: சுற்றுமுறைப் பயிற்சியை குண்டு இல்லாமலும் குண்டோடும் நின்று கொண்டே முதலில் பழகி, பிறகு சுற்றிப் பழகுக.


சுற்றுமுறையை நன்கு பழகிக்கொண்டபிறகு இடது காலில் நின்று, குண்டினை விடுவிக்கும் (Release) பயிற்சி யைக் கற்று, எறிந்து, போட்டியில் பங்குபெற்று, வெற்றி பெறுக


குறிப்பு: எடை பயிற்சியைச் செய்க எனும் இடங் களில் எல்லாம் ஆசிரியர் எழுதிய “நீங்களும் உடலழகு பெறலாம்” என்ற நூலில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு அவயவத்திற்கும் வலிமை; தரக்கூடிய பயிற்சிகளைக் கற்றுத் தெளிந்து பயன் பெறுக