பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வலிமையும் திறமையும் தரும் சில முக்கியமான பயிற்சி முறைகள்


1. ஒட்டத்திற்கான பயிற்சி முறைகள்


1. தரை உதைத்து ஓடிப் பழகுதல் (Bounding): பயன்: பயன் இடுகின்ற காலடியின் இடைவெளிதுரத்தை (Stride length) அதிகப்படுத்துவதுடன், கால்களை வலிமைப் படுத்துகிறது. விரைவோட்டம் வேகமாக ஒடவும் உதவுகிறது.


2. துள்ளி ஓடும் ஓட்டம் (Hopping) : ஒரு காலால் துள்ளித் துள்ளி நொண்டியடிப்பது போல ஒடுதல் ஒரு கால் தரையில் ஊன்றும்போது மறுகாலை பின்புறமாகச் செலுத்தி, வேகமாக உதைத்து, முன்புறம் வேகமாகச் செல்வது போல் உந்துதல்.


பயன்: இரண்டு கால்களையும் சமமான திறமாக வளர்ச்சி பெறச் செய்கிறது. உடல் சமநிலையுடன் விரைவாக ஒட உதவுகிறது.


3. முழங்கால் உயர்த்தி ஓட்டம் (Knee lif Run) : கால்களை நன்கு தரையில் உதைத்து, முழங்கால்களை மேற்புறம்-முன்புறமாக நன்கு உயர்த்தி ஒடுதல்.


பயன் ஒட்டத்தில் வேகம் ஏற்படுவதுடன், உடல் சமநிலை இழந்துபோகாமல் ஒட உதவுகிறது.