பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

கொள்கிறேன் என்று கேட்டேன்.

அவர் அன்று சிரித்துக் கொண்டு கூறிய பதில் இன்னும் என் நினைவிலே பசுமையாக இருக்கிறது. இன்று தான் அவர் எனக்கு யோசனை கூறியது போல அந்த பதில் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

Don't go to bloody any fellow for information. Got to library and refer books.

- இது தான்.அவரது பதில் ‘ யாரிடமும் போய் கேட்காதே! நூலகத்திற்குப் போ. புத்தகங்களைப் புரட்டு.”

செவியில் அறைந்தது போல அவர் தந்த பதிலை இன்னும் நான் சிரமேற்கொண்டு பின்பற்றி வருகிறேன்.

பிறரிடம்போய் குழம்பிக் கொள்ளாமல் நான் சிறப்பாக உழைக்க இதுவே எனக்கு வழிநடத்தும் கருத்தாக இருந்தது. இருக்கிறது. இன்னும் இருக்கும்.

என் இலட்சியம் எழுச்சி பெற வெற்றி பெற இந்த யோசனை தான் உதவியது என்றால் உண்மைதான்.அவரை நான் இன்றும் நன்றியுடன் நினைத்துப் போற்றி வருகிறேன்.