வள்ளுவர் வணங்கிய கடவுள் 115
கொடுத்தல், கழித்தல், களித்தல் என்பனவாகும்.
இந்தப் பத்தும் படுத்துகிற பாடுதான், பெரிய பாடுகள் என்று நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான்.
ஐம் புலன்கள் அடங் காதவை, அடக்க முடியாதவை என்று எல்லோரும் பேசுகின்றார்களே? அப் படி என்ன ஆற்றல் இருக்கிறது. இவைகளுக்கு இன்று அறிவியல் மூலம் தெரிந்த சில உண்மைகளை, அவற்றின் ஆற்றல் களை, நாம் இங்கே அறிந்து கொள்வதும் நலம் பயக்கும்.
1. செவி: கேட்பதற்காகப் பயன்படும் ஒரு பொறி, ஒசையின் தன்மையைக் கேட்டு, அதை முளைக்கு அனுப்பி வைக்கும் ஆற்றல் கொண்டது. இந்த ஓசையை நான்கு விதமாகப் பிரித்துக் காட்டுவர்கள். துண்ணோசை நினைவோசை, மிடற்றோசை, செவியோசை ஆகும்.
இந்த செவியானது, ஏறத்தாழ, 200,000 ஒலிகளை ஏற்று அவற்றை, தெளிவறத் தெரிந்து கொள்கின்ற ஆற்றலைப் பெற்றிருக்கிறது. செவிகள் இரண்டும் ஒசைகளை சதா நேரமும் மூளைக் கு அனுப் பிக் கொண்டுதானே இருக்கும்.
ஒசையைக் கேட் கின்ற மூளையும், வேலை செய்து கொண்டு, அதற்கேற்றாற்போல், துரித கதியில் செயல் பட்டுக் கொண்டுதானே இருக்க முடியும். அலைபாயும் மூளைக் கு அமைதி எப்போது ? அதுதான் செவிகளின் தர்மமும், தரும் சிரமமும்.
2. மெய் என்பது உடலைக் குறிக்கிறது. மெய்யின் தன்மை அதன்மேல் படுகின்ற தன்மையை, பரிசத்தால் உணர்ந்து, மூளைக்குத் தெரிவிப்பதுதான்.