உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொடு கல்தா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்க்க வசதி இல்லை. பெற்றோர்களின் வசதியின்மை சேர்ந்து பிள்ளைகளின் வாழ்வைப் பாழாக்கி விடுகின்றன. இதனால் சமுதாயத்திலே மூர்க்கர்களும் , முட்டாள்களும், வெறியர்களும் வீணர்களும், சோமாறிகளும் சோம்பேறிகளும் பெருத்து விடுகிறார்கள். பிள்ளைகளையும் பெண்களையும் பெற்றவர்கள் அவர்களுக்குக் கலியாணம் செய்து வைக்கத் துடிக்கிறார்களே தவிர மக்க ளின் வருங்காலப் பொறுப்புகளைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. கல்யாணங்கள் இன்றைய நிலையில் இ ன் ப ம் வளர்க்க உதவுவதில்லை. கடன் சுமை, வறுமைப்பாரம். வீண் கவலைகள், வேண்டாத பிள்ளைகளைத் தான் வளர்க்க உதவுகின்றன. விளைவு என்ன ? புத்தங்களினால் பாதிக் கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் படுமோசமாய்,

பாதாளத்தை நோக்கிச் சரிந்து கொண்டே போகிறது. நாட்டு மக்களின் வாழ்க்கை நாசப் பாதையிலே நலியும்போது, நாட்டி ன் பண்பாட்டை, நாகரீகத்தை உயர்த்திவிடுவோம் என்று சிலர் திட்டங்கள் எதுவுமிடா மலே வெறும் பேச்சுப் பேசுவது பேதமை யில்லையா ! வறுமையில் உழல்வோர், விவசாயத்தை பிழைப்பாகக் கொண்டவர்கள், அரசாங்க உத்தியோகம் கிடைக்காத வர்கள், இவர்களைப்போன்றோர்ச் சோம்பலை வளர்ப்பது போக, சோப்பேறித் தனத்தை கலையாகவும், தொழிலாக வும், மதிப்புக்குரிய பண்பாகவும் போற்றி வளர்க்கிறவர் கள் எண்ணற்றோர் சமுதாயத்தில் அதிகமாகி வருகிறார்கள். இவர்கள் இந்தப் பண்பை விட்டொழிக்க வேண்டும். சோம்பலுக்கு உதை கொடுத்து ஓட்டும்படி எல்லோ ரும் தூண்டப் படுதல் அவசியம், ப ண் ைப மாற்றிக் கொள்ள மறுக்கிறவர்களுக்கு உதை கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/24&oldid=1396053" இலிருந்து மீள்விக்கப்பட்டது