பக்கம்:கொடு கல்தா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனெனில், சோம்பல் மக்களின் வாழ்வில் அத்தழு மாக ஒன்றியுள்ளது. சோம்பேறிகளாய் வாழவே பலரும் விரும்புகிறார்கள். 'முதலாளி மகன் முதலாளி' முதல், சும்மா சுற்றிவரும் 'ஜாலி பிரதர்' வரை எத்தனையோ ரகங்கள் கலைஞன், எழுத்தாளன், நடிகன், பிரசங்கி, அரசியல்வாதி என்று ஏதாவது ஒரு பெயரை வைத்துக் கொண்டு, உழையாமலே உல்லாசமாய் வாழ்ந்து திரிகிற வர்கள் சோம்பேறித் தனத்துக்கு கெளரவப் போர்வை போர்த்த முயல்கிறார்கள். வேறில்லை! சோம்பேறித்தனம் குற்றங்களில் எல்லாம் பெரிய குற்றம் என்று விதி நிர்ணயிக்க வேண்டும். பொய் கெளரவத்துக்கும், போலிப் பகட்டுகளுக்கும் கல்தா கொடுத்தாக வே ண் டு ம். ஒவ்வொருவரும் மனித சமுதாயத்துக்குப் பயனாகும்படியான தொழிலைக் கட்டா யம் செய்தாக வேண்டும். கலை, இலக்கியம், அரசியல் முதலிய துறைகளில் ஈடுபட்டாலும் கூட, தங்கள் காலத் தின் ஒரு பகுதியை உபயோகமுள்ள தொழில் புரிவதற்கும் ஒதுக்கவேண்டும். இன்றைய நிலையில்-நாட்டு நிலை, மக்களின் வாழ்க் கைத் தரம் முதலியவைகளை நோக்குமிடத்து - நாடகம், சினிமா, இலக்கியம், அரசியல், சமுதாய சேவை என்ப தெல்லாம் வெறும் ஹம்பக் தான் என்று சொல்ல நேரிடு கிறது. இவற்றின் போர்வையால் விளையும் வீணத்தனங் கள்-செய்யப்படும் வெறியாட்டங்கள்-கணக்கில. வெறியாட்டங்களும் வீணத் தனங்களும் - அவை எப்பெயரில் வளரினும் சரியே-அகற்றப்பட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/25&oldid=1396054" இலிருந்து மீள்விக்கப்பட்டது