44
நம் நேரு
கவிந்திருந்த ஆகாய வெளி மிகத் தெளிவாகத் திகழ்ந்ததால், பொருள்களுக்கிடையே உள்ள தூரம் பற்றிய கணிப்பிலே அடிக்கடி நாங்கள் தட்டுக்கெட நேர்ந்தது. உண்மையில் மிகத் தொலைவில் இருந்த பொருள்கள் பல மிக அருகாமையில் இருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. தனிமை கனத்தது. எங்களுடன் தோழமை பூண அங்கு மரங்களோ, வேறு தாவர இனங்களோ இல்லை. கொடிய பாறைக் கற்கள் கண்களே உறுத்தி நின்றன. வெண் பனியும், உறைந்த பனிக்கட்டிகளும் மல்கிக்கிடந்தன. அபூர்வமாக எப்போதாவது புஷ்பங்கள் தோன்றி உவகை தந்தன. எனினும், நிர்மானுஷ்யம் பாழ்மையும் கவிந்து கிடந்த இயற்கையின் இத் தனி வெளிகளிலே நான் அபூர்வமான ஓர் ஆனந்தம் பெற்றேன். என் உடம்பிலே புதுச் சக்தியும் உள்ளத்தில் ஓர் மேம்பாடும் புகுந்து நிறைந்துவிட்ட உணர்வு எனக்கு ஏற்பட்டது.”
முதல் தடவை இவ்வித ஊக்கமும் உற்சாகமும் ஜவஹர்லால் செளகரியமும் சந்தர்ப்பமும் வாய்த்த போதெல்லாம் காஷ்மீர மலைவெளிகளில் சுற்றி ஆனந்தம் பெறுவதில் ஆர்வம் காட்டி வந்தது அதிசயம் இல்லைதான்.
அத்தியாயம் 4.
முதலாவது உலக யுத்தம் முடிந்துவிட்ட பிறகு இந்தியாவின் நிலைமையிலும் ஒரு மாறுதல் காணப்பட்டது. தொழில் அபிவிருத்தி ஏற்பட்டு, முதலாளிவர்க்கம் பணபலம் பெற்று வளர்ந்திருந்தது. யுத்தகாலத்தில்