உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம் நேரு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

நம் நேரு


காரணம். தனது வக்கீல் தொழிலே அவர் துறந்துவிட விரும்பாதது மற்றொரு காரணமாம்.

உலகமகா யுத்தம் பிறந்தது. இந்தியாவிலும் பரபரப்பு தலைதூக்கியது. எங்கோ வெகுதொலைவில் தான் யுத்த தாண்டவம் நிகழ்ந்தது. அதன் கோரக்கொடுமைகள் இந்நாட்டைத் தொடக்கூட இல்லே. எனினும் சதிக் குற்றங்களும், துப்பாக்கிப் பிரயோகங்களும், ராணுவத்துக்குக் கட்டாயமாக ஆள்சேர்க்கும் முறைகளும் நாட்டிலே பரவின. வெளிப்படையாக உரத்த குரலெடுத்து பிரிட்டிஷாருக்கு விசுவாச கீதம் பாடினார்கள் ஜனங்கள். ஆனால் உள்ளத்திலே ஜெர்மனியின் வெற்றிச்சேதிகளை அறிந்து ஆனந்தக்களிப்பு பாடிக்கொண்டார்கள். இந்நாட்டினருக்கு ஜெர்மனிமீது திடீர் அபிமானம் பிறந்து விட்டதாகச் சொல்லமுடியாது. “நம்மை அடக்கி ஆளும் அந்நியன் மற்றொரு பலவான் கையிலே சிக்குண்டு. திணறுகிறான். பாவி நன்றாக அனுபவிக்கட்டும்!" என்கிற தாராள மனோபாவம்தான் காரணம். பலவீனர்கள் இத்தகைய மனோபாவத்தால் தாமே வஞ்சம் தீர்க்கும் பொழுது பெறக் கூடிய மகிழ்வைப் பெற்று விடுவதாகக் கருதுகிறார், இதுவும் மனித கபாவங்களில் ஒன்றுதான்.

மீண்டும் அரசியல் விழிப்பு ஏற்பட்டது நாட்டிலே, லோகமான்ய திலகர் சிறையிலிருந்து வெளி வந்ததும் ‘ஹோம் ருல் லீக்’ ஆரம்பித்தார். அன்னிபெசன்ட் அம்மையாரும் ஒரு இயக்கம் தொடங்கியிருந்தார். ஜவஹர்லால் நேரு இரண்டிலும் சேர்ந்து பணியாற்றினர். பெசன்ட் அம்மையாரின் இயக்கத்துக்காகத் தான் அதிகம் பாடுபட்டார். அன்னிபெசன் சேவைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/39&oldid=1366170" இலிருந்து மீள்விக்கப்பட்டது