பக்கம்:நம் நேரு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

37


இந்திய அரசியலில் தீவிரமாகப் பங்கு பற்றி ஓங்கின. காங்கிரசின் வருஷாந்திரக் கூட்டங்களில் புதிய வேகமும் விறுவிறுப்பும் புகுந்திருந்தன. முஸ்லிம் லீக் காங்கிரசுடன் சேர்ந்து முன்னேறியது. அரசியல் சூழலில் ஓர் மின் சக்தி தோன்றி மிளிர்ந்தது. இந்தியாவின் வாலிப சமுதாயம் அதிக ஊக்கம் பெற்றனர். "கூடிய சீக்கிரம் மகத்தான காரியங்கள் சாதிக்கப்படும்” என்ற நம்பிக்கை பிறந்தது இளைஞர்களின் உள்ளத்திலே.

அன்னிபெசன்ட் அம்மையார் சிறையில் அடைக்கப் பட்டனர். நாடு முழுவதும் பரபரப்புற்றது. ஹோம் ரூல் இயக்கம் எங்கும் பரவியது: பழைய தீவிரவாதிகள் ஈர்த்ததுடன் புதியபுதிய அங்கத்தினர்களையும் தன்வயப் படுத்தியது. மத்தியதர வர்க்கத்தினர் தான் இந்த இயக்கத்தில் ஆர்வம் காட்டினர். இவ் இயக்கம் மக்களின் இதயத்தைத் தொட்டதே இல்லே.

அன்னிபெசன்டைக் கைது செய்த செயல் முதிய தலைமுறையினரையும் நிமிர்ந்து உட்கார வைத்தது. மிதவாதத் தலைவர்கள் பலர் உணர்ச்சி பெற்றார்கள். எனினும் முன் வந்து செயலாற்ற எவரும் துணியவில்லே. நாடு நல்ல தலைமையை எதிர்நோக்கிக் காத்து நின்றது. மாணவர்களுக்கும் வாலிப சமுதாயத்தினருக்கும் நற் போதனைகள் புரிந்து வந்த மிதவாதத் தலைவர் பூரீனிவாச சாஸ்திரி திட்டமிட்டு செயலாற்ற முனைவார் என இளைஞர்கள் எதிர்பார்த்தார்கள். அவரோ மோனநிலையில் ஆழ்ந்து விட்டார் மிதவாதத் தலைவர்களில் சிலர் ஏதோ செயல்புரியக் கிளம்பினர்; ஆனால் விரைவிலேயே பின் வாங்கி விட்டார்கள்.


3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/40&oldid=1366174" இலிருந்து மீள்விக்கப்பட்டது