உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைேலபெற்ற நினைவுகள் 烧 تماعي 6 பெரும்பாலும், பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை அவர்கள் எப்படி வாழ வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்; வழிவகுத்துக் கொடுக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில், வகுப்பு நேரத்தில், பொழுது போகாத சமயத்தில், பிற்காலத்தில் நீ என்ன ஆக வேண்டும் என்று விரும்புகிறாய்? என சில ஆசிரியர்கள் மாணவர்களைக் கேட்பது உண்டு. நான் டாக்டர் ஆக விரும்புகிறேன், என்ஜினியர் ஆக விரும்புகிறேன், வக்கீல் ஆக விரும்புகிறேன், ஆசிரியராகிப் பல பேருக்கு அறிவு புகட்ட விரும்புகிறேன் என்று மாணவர்களும் அவரவருக்குத் தோன்றியதைச் சொல்வார்கள். சிலர் வித்தியாசமாக, இன்ஜின் டிரைவர் ஆக விரும்புகிறேன், ஏரோப்ளேன் பைலட் ஆக ஆசைப்படுகிறேன் என்று சொல்லி மற்றவர்களைச் சிரிக்கவோ வியக்கவோ வைப்பார்கள். நான் எழுத்தாளன் ஆக விரும்புகிறேன், கவிஞனாக வாழ ஆசைப்படுகிறேன் என்று எந்த மாணவரும் சொல்வதில்லை. ஒவியனாக வளர விரும்புகிறேன், ஒரு கலைஞனாக வாழ்ந்து பெயர் பெறப்போகிறேன் என்று எவரும் சொல்ல ஆசைப்படுவதுமில்லை. அப்படி யாராவது சொன்னால், அவர்களை, பிழைக்கத் தெரியாதவர்கள், உருப்பட விரும்பாதவர்கள் என்று தான் சமூக மனிதர்கள் குறிப்பிடுவார்கள். பொதுவாக, பிள்ளைகளின் எதிர்காலத்தை, வாழ்க்கையைப் பெற்றோர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். முக்கியமாக, அப்பா இல்லாத குடும்பங்களில் அம்மா தீர்மானிப்பாள். அல்லது பொறுப்புள்ள உறவினர்கள் பாதுகாப்பாளர்களாக 'கார்டியன்களாக இருந்து நெறிப்படுத்துவார்கள். வகுப்பில் பெரிதாகத் தெரிவித்தபடி மாணவர்கள் அனைவரும் பிற்காலத்தில் அப்படியே ஆனார்கள் என்று சொல்வதற்கில்லை. வசதியுள்ளவர்கள், வாய்ப்புப் பெற்றவர்கள் ஒரு சிலர் தாங்கள் விரும்பியபடி சமூக வாழ்வில் அடிபதித்து வாழ்க்கைப் பாதையில் முன்னேறியிருக்கலாம். பெரும்பாலானவர்கள் ஏதேனும் அலுவலகத்தில் குமாஸ்தாவாக, உதவியாளராக மாதச் சம்பளம் பெறும் ஏதோ ஒரு உத்தியோகஸ்தராகத்தான் ஆக முடியும். பலர் வேலை